நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
ராணிப்பேட்டையில் ஆடி கிருத்திகை முன்னிட்டு ரத்தனகிரி, திருத்தணி முருகன் கோவிலுக்கு ஏராளமான மக்கள் செல்வார்கள். இதனால் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து நாளை ராணிப்பேட்டை மாவ்ட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது
இதற்கு பதிலாக ஆகஸ்ட் 12ஆம் தேதி அதாவது வரும் சனிக்கிழமை பள்ளி கல்லூரிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva