துணை முதல்வரை அடுத்து தூத்துக்குடி செல்கிறார் கவர்னர்
சமீபத்தில் தூத்துகுடியில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சி தலைவர்கள் தூத்துகுடி சென்று அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினர். இந்த நிலையில் நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் இன்று துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர்களும் தூத்துகுடிக்கு சென்று அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினர்
இந்த நிலையில் துணை முதல்வரை அடுத்து நாளை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்களும் தூத்துகுடிக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நாளை காலை தூத்துகுடி செல்லும் கவர்னர் பன்வாரிலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவுள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது.
நாளை கவர்னர் தூத்துகுடி செல்லவுள்ளதை அடுத்து தூத்துகுடியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை அம்மாவட்ட காவல்துறையினர் செய்து வருகின்றனர். காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் கவர்னர் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.