Daily Horoscope
✕

புதிய உச்சம் தொட்ட தக்காளி விலை! – தொடர் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி!

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 23 நவம்பர் 2021 (09:23 IST)
கடந்த வாரங்களில் ஏற்பட்ட கனமழையால் தமிழகத்தில் தக்காளி தொடர்ந்து விலை உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்த நிலையில் மார்க்கெட்டுகளில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் தினசரி ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் உட்பகுதிகளில் இருந்து 100 லாரிகளில் காய்கறி வரத்து இருந்த நிலையில் தற்போது 35 லாரிகளே வருவதாக கூறப்படுகிறது.

ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் இன்று தக்காளி விலை அதிகபட்சமாக கிலோ ரூ.140 ஐ தொட்டுள்ளது. மற்ற காய்கறிகளும் கடந்த சில தினங்களில் வேகமாக விலை உயர்ந்த நிலையில் தற்போது மெல்ல விலை குறைந்து வருகிறது. எனினும் தக்காளி  விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் விஜய்யுடன் மெட்ரோவில் பயணம்...

இன்று டெல்லியில் புதிய போராட்டம்.. ஜந்தர் மந்தரில் மீண்டும் பரபரப்பு..

ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் புதிய ஐபேட் மினி 8.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்?

சவுதி அரேபியா விமான நிலையத்தில் கடும் தாக்குதல்.. 12 பேர் பலி.. ஹூதி அமைப்பினரின் சதியா?

கூட்டணி கட்சி இல்லாமல் திமுக ஓட்டு வாங்கியதா?!.. திருமாவளவன் கருத்து!....

அடுத்த கட்டுரையில்
Show comments