ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (11:30 IST)

செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! – எந்தெந்த சுங்கச்சாவடிகளில்?

தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 50 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 22 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது மீதமுள்ள 28 சுங்க சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. கார், வேன் போன்ற வாகனங்களுக்கு 5 ரூபாயும், கனரக வாகனங்களுக்கு ரூ.150 வரை சுங்கக்கட்டணம் உயர வாய்ப்புள்ளது.

அதன்படி, சமயபுரம் சுங்கசாவடி, கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், மதுரை எலியார்பதி, நாமக்கல் ராசம்பாளையம், தஞ்சை வாழவந்தான் கோட்டை, குமாரபாளையம் விஜய மங்கலம், விக்கிரவாண்டி மொரட்டாண்டி, உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி, வீரசோழபுரம், சேலம் மேட்டுபட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தர்மபுரி பாளையம், விருதுநகர் புதூர்பாண்டியாபுரம், திருப்பராய்த்துறை, பொன்னம்பலப்பட்டி, சேலம் ஒமலூர், நத்தக்கரை, வைகுந்தம் உள்ளிட்ட 28 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.