1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (15:28 IST)

தக்காளியை பாதுகாக்க வயலில் சிசிடிவி கேமிரா.. விவசாயி சிறப்பு ஏற்பாடு..!

தக்காளியை பாதுகாப்பதற்காக வயலில் சிசிடிவி கேமரா பொருத்திய மகாராஷ்டிரா விவசாயி ஒருவர் குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
தக்காளி விலை கடந்து சில நாட்களாக அதிகரித்து கொண்டே இருந்த நிலையில் தக்காளி விவசாயிகள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் சம்பாதித்துள்ளனர். 
 
இந்த நிலையில் தக்காளி பயிரிடும் இடத்தில் திருட்டு நடப்பதை அறிந்த மகாராஷ்டிரா மாநிலச் சேர்ந்த விவசாயி சரத் ராவத் என்பவர் தன்னுடைய வயலில் சிசிடிவி கேமராவை பொருத்தி உள்ளார். 
 
தக்காளியை யாரும் திருடி விடக்கூடாது என்பதற்காகவும் அப்படியே திருடினாலும் உடனடியாக அந்த திருடனை கண்டுபிடிப்பதற்காகவும் அவர் ரூ.22,000 செலவு செய்து தனது வயலில் சிசிடிவி கேமராக்களை பொருத்து உள்ளார்.  இதன் பிறகு அவருடைய வயலில் தக்காளி திருடு போவது என்று போனதாக கூறியுள்ளார் என்று சொல்லி
 
Edited by Siva