1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

petrol
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 22 நாட்களாக உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் 23வது நாளான இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் சற்றுமுன் அறிவித்துள்ளன. 
 
இதன் காரணமாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் விலை குறைக்கப்படவில்லை என்ற ஆதங்கம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது 
 
அது மட்டுமின்றி மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்த நிலையில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது