ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 4 டிசம்பர் 2021 (08:10 IST)

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் கடந்த இருபத்தி எட்டு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருக்கும் நிலையில் இன்றும் டீசல் மற்றும் பெட்ரோல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதன் காரணமாக சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கிட்டத்தட்ட ஒரு மாதமாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருப்பது ஒரு பக்கம் பொது மக்களுக்கு நிம்மதி அளித்திருந்தாலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது