1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 28 அக்டோபர் 2021 (08:09 IST)

உச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது என்பதும் சராசரியாக மூன்று நாட்களுக்கு ஒரு ரூபாய் என்ற விலையில் உயர்ந்து கொண்டு வருவதால் பெட்ரோல் விலை 105 ரூபாய் நெருங்கிக் கொண்டு வந்தது என்பதும் டீசல் விலை 101 ரூபாயை நெருங்கிக் கொண்டு வந்தது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை 105 ரூபாயையும், டீசல் விலை 101 ரூபாயையும், தாண்டிவிட்டது வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு  29 காசுகள் உயர்ந்துள்ளது. இதனையடுத்து சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 105 ரூபாய்க்கு விற்பனையாகிறது 
 
அதேபோல் சென்னையில் டீசல் ஒரு லிட்டர் 33 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் ரூ.101.25 என்ற விலைக்கு விற்பனையாகிறது.