வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 20 அக்டோபர் 2021 (07:37 IST)

பெட்ரோல் விலை இன்றும் உயர்வு: ரூ.100ஐ நெருங்கியது டீசல்!

கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனை அடுத்து பெட்ரோல் விலை 104 ரூபாயையும், டீசல் விலை 100 ரூபாயையும் நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்று சென்னையில் பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து 103.31 என்ற விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் டீசல் விலை இன்று மிக அதிகமாக முப்பத்தி நான்கு காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை சென்னையில் ரூ.99 26 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பெட்ரோல் விலை ரூபாய் 104ஐ நோக்கியும், டீசல் விலை ரூ.100ஐ நோக்கியும், சென்று கொண்டிருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.