1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 14 பிப்ரவரி 2022 (09:13 IST)

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா? முழு விபரங்கள்!

கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ.101.40 என்றும் சென்னையில் இன்று டீசல் விலை ரூபாய் 91.43 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
102 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்றாலும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்குப் பின்னர் கணிசமாக பெட்ரோல் டீசல் விலை உயரும் என்று கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஐந்து மாநில தேர்தலுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்குமா அல்லது இதே நிலை தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்