தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
- சென்னையில் மட்டும் 9000: இன்றைய தமிழக கொரோனா நிலவரம்!
- பாடி மேம்பாலத்திலிருந்து பயணி விழுந்து சாவு! – சென்னையில் பரபரப்பு!
- சென்னையில் உள்ள 2454 தெருக்களில் கொரோனா பாதிப்பு: மாகராட்சி தகவல்!
- டோங்கா எரிமலை வெடிப்பு: சென்னையிலும் அதிர்வலைகள் பதிவானதால் பரபரப்பு
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை!
கடந்த எழுபத்தி மூன்று நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏறாமல் இருப்பதன் காரணமாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று 74வது நாளிலும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்றும் நேற்றைய விலையிலேயே விற்பனை ஆகிறது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது
இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவடையும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
