திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (15:37 IST)

#COVID19 கண்டுபிடிக்கப்பட்டதன் 100ஆவது நாள் இன்று. - டாக்டர் ராமதாஸ்

தமிழகத்தில்    738 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்,  கொரோனா தொற்று குறித்து  பாமக தலைவரும் மருத்துவருமான ராமதாஸ் தனது டுவிட்டர்  பக்கதில் பதிவிட்டுள்ளதாவது :

''#COVID19 கண்டுபிடிக்கப்பட்டதன் 100ஆவது நாள் இன்று. 100 நாட்களில் 200 நாடுகள்-பிராந்தியங்களில் பரவியிருக்கிறது கொரோனா. 400 கோடி மக்களை முடக்கியிருக்கிறது. மக்களின் மகிழ்ச்சியை பதற்றமாக மாற்றியிருக்கிறது. அடுத்த சில வாரங்களில் இந்த நிலை மாறி உலகம் மகிழ்ச்சியில் திளைக்கட்டும்! ''என தெரிவித்துள்ளார்.