படிப்படியாய் குறையும் தங்கம்: இன்றைய விலை நிலவரம்!!
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
சென்னையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,747 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 264 குறைந்தது. மூன்று நாட்களாக தங்கம் விலை குறைந்ததால் சவரன் ரூ.37,976-க்கு விற்பனையாகிறது.