1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (08:01 IST)

மாமல்லபுரத்தில் இன்று அனுமதி இலவசம்: என்ன காரணம்?

மாமல்லபுரத்தில் நுழைவு கட்டணம் இல்லாமல் இன்று ஒரு நாள் சிற்பங்களை ரசிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் என்பதும் அங்குள்ள புராதன சின்னங்களை பார்த்து ரசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18ஆம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுவதை அடுத்து இன்று மாமல்லபுரத்தில் வரும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாமல்லபுரத்தின் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு இலவசமாக பார்க்கலாம் என்று அறிவித்துள்ளது. இன்று மாமல்லபுரம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva