வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 20 செப்டம்பர் 2021 (07:02 IST)

16வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் விலை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நாளுக்குநாள் வீழ்ச்சி அடைவதை அடுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் இல்லாமல் ஒரே விலையில் இருந்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக சென்னையில் கடந்த 15 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இதனை அடுத்து இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரங்கள் பின்வருமாறு.
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98.96
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.93.26