1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. today and tomorrow heavy rain in chennai

சென்னையில் நாளை வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்!

rain red umbrella
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது சென்னையில் இன்றும் நாளையும் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று கூறினார்.

மேலும்  தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது  மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திர கடற்கரை பகுதியில்  நிலவக்கூடும்

இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நவம்பர் 16ஆம் தேதி வலுப்பெற்று  வடகிழக்கு திசையில் நடந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒடிசா கடற்கரை பகுதியில்  நிலவக்கூடும்

 எனவே இதன் காரணமாக சென்னையில் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்யும் என்று தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும்  பாலச்சந்திரன் அவர்கள் கூறினார்.

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 8 மாவட்டங்களுக்கு கனமழை: வானிலை எச்சரிக்கை