1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (06:50 IST)

இன்றைய பொதுக்குழுவில் என்ன நடக்கும்?

ஒரு வழியாக அனைத்து தடைகளையும் தாண்டி இன்று காலை சென்னையில் அதிமுக பொதுக்குழு கூடுகிறது. நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததையே ஒரு வெற்றியாக எடப்பாடி பழனிச்சாமி அணி கொண்டாடி வருவதால் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.



 
 
இதே உற்சாகத்துடன் இன்று நடைபெறவுள்ள பொதுக்குழுவில் சசிகலா கட்சியில் இருந்தும் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜிஆருக்கு பின்னர் எப்படி அதிமுகவில் தலைவர் என்ற பதவியே இல்லை என்று ஆனதோ, அதேபோல் ஜெயலலிதாவுக்கு பின்னர் பொதுச்செயலாளர் என்ற பதவியே இல்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது.
 
மேலும் இன்றைய பொதுக்குழுவில் 95% நிர்வாகிகள் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதால் இன்றைய பொதுக்குழுவில் எடுக்கும் முடிவுகள் நிச்சயம் வலிமை வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இனி தினகரனுக்கு இருக்கும் ஒரே வழி ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதுதான். ஆனால் அதற்கு 4 ஆண்டுகள் பதவியை துறக்க எம்.எல்.ஏக்கள் முன்வருவார்களா? என்பது கேள்விக்குறி. குறிப்பாக கருணாஸ் உள்பட் 3 எம்.எல்.ஏக்களும் இதற்கு உடன்பட மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது. இன்றைய பொதுக்குழுவிற்கு பின்னர் அரசியலில் பெரும் திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது