1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today 84 persons affected by corona virus

தமிழ்நாட்டில் இன்று 100க்கும் குறைந்த கொரோனா தொற்று உறுதி

corona
தமிழகத்தில் படிப்படியாக கொரோனா  வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் வெறும் 84 பேர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கையை 789 என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 84 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் சென்னையில் மட்டுமெ 18 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 121 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு 100க்குள் குறைந்துள்ளது என்பது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது முதல் வந்தே பாரத் ரயில்: மலர்கள் தூவி வரவேற்பு