1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (17:29 IST)

நீதிபதியாகும் முதல் பழங்குடியின பெண் ஸ்ரீபதி! குவியும் பாராட்டுகள்

ஜவ்வாது மலையில் இருந்து பழங்குடிப் பெண் ஒருவர் தமிழ் நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
 
தமிழ் நாடு அரசு பணியாளர்  தேர்வாணையம் நடத்திய சிவில்    நீதிபதிக்கான போட்டித் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம், புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த பழங்குடியின ஸ்ரீபதி(23) தேர்ச்சி  பெற்றுள்ளார்.
 
இவர் 6 மாதப் பயிற்சிக்கு பின்னர் நீதிபதி ஆகிறார். தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு குழந்தை பிறந்த நிலையில், இவர் சென்னைக்கு வந்து  தேர்வு எழுதியுள்ளார் என்ற தகவல் வெளியாகிறது.
 
ஸ்ரீபதிக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.