திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (08:20 IST)

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு.. அண்ணாமலை அழுத்தம் காரணமா?

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடந்து பல மாதங்கள் ஆகிய பின்னரும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என்பதை பல அரசியல்வாதிகள் சுட்டிக் காட்டினர். குறிப்பாக நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று விளக்கம் அளித்துள்ள தேர்வாணையம் ஜனவரி 12ஆம் தேதி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை, அன்புமணி போன்ற தலைவர்களை அழுத்தம் காரணமாக தான் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Siva