ஒரே தெருவை சேர்ந்த 12 பேர் தேர்ச்சி: என்ன நடக்குது டி.என்.பி.எஸ்.சி தேர்வில்?

tnpsc
என்ன நடக்குது டி.என்.பி.எஸ்.சி தேர்வில்?
Last Modified புதன், 19 பிப்ரவரி 2020 (08:32 IST)
சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய தாலுகாக்களில் தேர்வு எழுதியவர்கள், தரவரிசைப் பட்டியலில் முதல் 39 இடங்களைப் பிடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த மையங்களில் தேர்வு எழுதியவர்கள் பலர் முறைகேடு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டு இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் ஒரே தெருவைச் சேர்ந்த 12 பேர் வெற்றி பெற்றிருப்பதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி
குரூப் 2 தேர்வில் கடலூர் மற்றும் விழுப்புரத்தில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் 60 இடங்களை பிடித்தது எப்படி என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

ஒரே தெருவை சேர்ந்த 12 பேர் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று தற்போது அதிகாரிகளாக இருப்பவர்கள் கடலூரில் உள்ள மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பட்டுள்ளதாகவும், இன்றைய விசாரணையில் 12 அரசு அதிகாரிகள் முறைகேடு செய்து வேலை பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி விவகாரத்தில் தோண்ட தோண்ட மர்மங்கள் அதிகரித்து வருவதால் டி.என்.பி.எஸ்.சி அமைப்பு மீதான நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதாக கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :