வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2024 (16:11 IST)

உயர்த்தப்பட்ட மின் கட்டணம்.. எஸ்.எம்.எஸ் அனுப்பி வரும் தமிழ்நாடு மின்வாரியம்..!

உயர்த்தப்பட்ட மின் கட்டணம்.. எஸ்.எம்.எஸ் அனுப்பி வரும் தமிழ்நாடு மின்வாரியம்..!
தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் கடந்த மாதம் மின்கட்டணம் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்ததால் வித்தியாச தொகை குறித்த தகவல்களை தமிழக மின்சார வாரியம் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
மின் நுகா்வோா் உரிமையாளரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு மட்டுமே இந்த எஸ்.எம்.எஸ் தகவல் செல்லும். வாடகைக்கு குடியிருப்போருக்கு இது  தெரியவாய்ப்பில்லை. 
 
எனவே வாடகைக்கு குடியிருப்போர் தங்களின் வீட்டு உரிமையாளர்களை அணுகி வித்தியாச தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்துமாறு குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் இதுகுறித்த முழு விவரங்கள் தமிழக மின்வாரிய  இணையதளத்திலும்  பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva