புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 ஜனவரி 2021 (15:46 IST)

திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் சமீபத்தில் திரையரங்குகள் திறந்து உள்ள நிலையில் வரும் பொங்கல் தினத்தில் இருந்து ’மாஸ்டர்’ உட்பட ஒரு சில புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன 
 
இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் டிக்கெட்டுகள் ரூபாய் 500, 1000 முதல் 2000 வரை விற்பனை ஆவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் எச்சரித்துள்ளார் 
 
மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் திரையரங்குகளுக்கு கேளிக்கை வரி உள்பட பல்வேறு சலுகைகள் அளித்துள்ள நிலையில் தமிழகத்திலும் அதேபோன்ற சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது
 
இந்த கோரிக்கை குறித்து பதில் அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ’திரையரங்குகளுக்கு கேளிக்கை வரியில் சலுகை அளிப்பது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார்’ என்று தெரிவித்துள்ளார். இதனால் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் எதிர்பார்க்கப்படுகிறது