புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2020 (13:23 IST)

எஸ்வி சேகரின் கெட்டுப்போன பால் பாக்கெட்: ஆவின் நிர்வாகத்தின் அதிரடி

எஸ்வி சேகரின் கெட்டுப்போன பால் பாக்கெட்
நடிகரும் பாஜகவின் பிரமுகருமான எஸ்வி சேகர் சமீபத்தில் தனது டுவிட்டரில் ’இன்று காலை வாங்கிய ஆவின் பால் 13 பாக்கெட்டுகளில் 9 பாக்கெட்டுகள் பால் குக்கரில் காச்சும் போது திரிந்து விட்டது. வீட்டில் 90 வயது தாயார் 7 வயது 2 வயது குழந்தைகள் உள்ளது. நான் என்ன செய்வது’ என்று கேள்வி எழுப்பி இருந்தார். எஸ்வி சேகரின் இந்த டுவீட்டுக்கு நெட்டிசன்கள் கிண்டலுடன் கூடிய கமெண்டுக்களை பதிவு செய்திருந்தனர்.
 
இந்த நிலையில் இதுகுறித்து தற்போது இன்னொரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில், ‘நான் தங்களுக்கு பதிவு பண்ணிய 3 மணி நேரத்துக்குள் 9 புதிய double toned பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகத்திலிருந்து ஒரு அதிகாரி வீட்டிற்கு வந்து மாற்றிக்கொடுத்து சென்றார். தங்களுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்’ என எஸ்வி சேகர் குறிப்பிட்டிருந்தார்’ என்று தெரிவித்துள்ளார்.
 
எஸ்வி சேகர் ஒரு டுவிட் செய்ததும் உடனடியாக தமிழக அரசின் உத்தரவின்பேரில் அவருடைய கெட்டுப்போன பால் மாற்றப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசின் செயல்பாடு மிக வேகமாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் மீண்டும் கிண்டலடித்து வருகின்றனர். கொரோனா நேரத்தில் மக்களின் உயிரை காக்க வேண்டிய ஆயிரக்கணக்கான பணிகள் இருக்கும் நிலையில் எஸ்வி சேகருக்கு பால் பாக்கெட்டுக்கள் மாற்றி கொடுப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.