1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2020 (15:46 IST)

தமிழகத்தில் ஜிம் திறக்கப்படும்: எடப்பாடியார் அறிவிப்பு!!

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி.
 
ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் தார்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வரும் 10 ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.
 
அதாவது ஏற்கனவே மத்திய அரசு இவற்றிகுற்கு அனுமதி அளித்திருந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தரப்பில் வெளியான அறிக்கை பின்வருமாறு... 
 
மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள், 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் 10.8.2020 முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல் முறைகள் தனியாக வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.