வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 15 மே 2024 (08:19 IST)

கட்டுமான நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு..! தமிழக அரசின் முடிவில் திடீர் மாற்றம்..!

கடும் கோடை வெயில் கொளுத்தி வருவதால் கட்டுமான நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது என்று அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

 சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மே மாத இறுதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது இருந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான நிறுவனங்கள் தங்களது பணிகளை தொடரலாம் என்று தொழிலாளர் பாதுகாப்பு இயக்ககம் அனுமதி அளித்துள்ளது.

இதனால் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva