திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (09:29 IST)

துப்பாக்கி எடுப்போருக்கு துப்பாக்கியால் பதிலடி: ஆளுநர் ரவி அதிரடி

rn ravi
துப்பாக்கி எடுப்பவர்களுக்கு துப்பாக்கியால் பதிலடி கொடுக்கப்படும் என தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து ஆர்என் ரவி அவர்கள் அதிரடியாக விழாக்களில் பேசி வருகிறார் என்பதும் அதற்கு ஆளும் கட்சியின் தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக ஆர்என் ரவி அவர்கள் சனாதனம் குறித்து பேசும் போதெல்லாம் அவருக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த நிலையில் துப்பாக்கியை பயன்படுத்தும் ஒருவரை துப்பாக்கியால் தான் கையாள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
 
வன்முறையை ஏற்க முடியாது என்றும் ஆனால் அதே நேரத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதற்கான விலையை ஒருவர் கொடுத்தே ஆக வேண்டும் என்றும் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி கூறியுள்ளார்
 
இந்தநிலையில் ஆளுநரின் வேலை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வெளியிட்டு மத்திய அரசுக்கும் அதன் கொள்கை முடிவுக்கும் வக்காலத்து வாங்கி சுய விளம்பரம் தேடிக்கொள்வது அல்ல என்றும் மத்திய அரசுக்கு விசுவாசத்தை காட்ட உதவாக்கரை கருத்துக்களைச் சொல்லி ஊர் மக்களின் எதிர்ப்பையும் கண்டனத்தையும் ஆளுநர் வைத்துக் கட்டக் கூடாது என்றும் முரசொலியில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது