ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (08:35 IST)

முதல்வரை அடுத்து துணைமுதல்வரும் வெளிநாட்டு பயணம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் லண்டன், அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை தமிழகத்தில் உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இந்த வெளிநாட்டு பயணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது


முதல்வரை அடுத்து அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி, செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டனர். மேலும் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு முறை பயணமாக இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அடுத்து தற்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் சிங்கப்பூர், சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் கட்டுமானத் துறையை மேம்படுத்தும் நோக்கில் அந்த நாடுகளில் உள்ள தொழில்நுட்பங்களை பார்வையிட துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் செல்வதாகவும், இந்த பயணத்தின் போது ஒரு சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும், கட்டுமானத்துறையில் வெளிநாட்டு தொழில் நுட்பங்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் அமைய இருப்பதாகவும் கூறப்படுகிறது