திங்கள், 2 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 3 ஜூலை 2016 (12:40 IST)

சொந்த செலவில் இப்தார் நோன்பு கொண்டாடிய முதல்வர் ஜெயலலிதா

சொந்த செலவில் இப்தார் நோன்பு கொண்டாடிய முதல்வர் ஜெயலலிதா

சொந்த செலவில் இப்தார் நோன்பு கொண்டாடிய முதல்வர் ஜெயலலிதா
முஸ்லீம் மக்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டியைகையை, தனது சொந்த செலவில் கொண்டாடி மகிழ்ந்தார் முதல்வர் ஜெயலலிதா.
 

 
இப்தார் என்னும் ரமலான் நோன்பு முஸ்லீம் மக்களின் புனித பண்டிகை ஆகும். இந்த நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியில், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி மாநிலத் தலைவர் ஒய்.ஜவஹர் அலி,  அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த நிகழ்ச்சியில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தலைமை வகித்து  பேசுகையில், இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகியவை இஸ்லாத்தின் 5 முக்கியக் கடமைகளை எடுத்துரைத்தார்.
 
இந்த விருந்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த செலவில் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், முஸ்லீம் சமூகத்து மக்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.