புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 22 மார்ச் 2018 (15:34 IST)

மாணவியை மாட்டுக்கு போடப்படும் ஊசியால் குத்திய ஆசிரியர்!

திருச்சியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவியை  மாட்டுக்கு போடப்படும் ஊசியால் குத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 
திருச்சி மாவட்டதில் உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒரு அரசு பள்ளியில், தீனா மேரி என்ற மாணவி 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். அந்த மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்றாள்.
 
அப்போது தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ பாடம் நடத்தி கொண்டிருந்தார், அதனை கவனிக்காமல் அந்த மாணவி சக மாணவியுடன் மாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் ஊசியை வைத்து விளையாடி கொண்டிருந்தாள். இதனால் கோபமடைந்த ஆசிரியர் அந்த ஊசியை மாணவிக்கு போட்டுள்ளார். இதனால் மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
 
இந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ மீது மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து போலீசார் ஆசிரியரை விசாரித்து வருகின்றனர்.