வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (12:51 IST)

புற்றுநோய் பாதித்த தென்காசி சிறுமிக்கு உதவ உத்தரவிட்ட தமிழக முதல்வர்!

தென்காசி சிறுமிக்கு உதவ உத்தரவிட்ட தமிழக முதல்வர்
முன்பெல்லாம் தமிழக முதல்வருக்கு ஒரு மனு கொடுக்க வேண்டும் என்றால் சாமானியர்களுக்கு கிட்டத்தட்ட அது முடியாத காரியமாகவே இருந்து வந்தது. ஆனால் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மிகவும் எளிமையானவர் என்பதால் டுவிட்டரில் ஒரு கோரிக்கை விடுத்தால் போதும், உடனடியாக அதற்கு பதிலளிப்பது மட்டுமன்றி நடவடிக்கையும் எடுத்து வருகிறார். குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்தில் டுவிட்டரில் எந்த ஒரு உதவி தேவை என்று முதல்வரின் டுவிட்டர் பக்கத்துக்கு டேக் செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த வகையில் தென்காசியை சேர்ந்த சிறுமி ஒருவர் ரத்த புற்றுநோயால் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் அவரது பெற்றோர்கள் மாதம் ஒருமுறை சென்னைக்கு வந்து மருந்து வாங்கி வந்தனர். இந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக அந்த சிறுமியின் பெற்றோர்களால் சென்னைக்கு வந்து மருந்து வாங்க முடியவில்லை. இதனை தென்காசியை சேர்ந்த ஒருவர் டுவிட்டரில் குறிப்பிட்டு உதவி செய்யும்படி தமிழக முதல்வருக்கு டிவிட்டரில் டேக் செய்துள்ளார் 
 
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட தமிழக முதல்வரை அந்த சிறுமிக்கு தேவையான மருந்துகளை அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்த சின்னஞ்சிறு வயதிலேயே நோயை எதிர்த்துப் போராடும் இந்த குழந்தை விரைவில் பூரண குணமடைந்து நலம் பெற நலம் பெற வேண்டி கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த உடனடி நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது