புதன், 26 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 19 மே 2016 (09:00 IST)

தபால் ஓட்டு அதிமுக முன்னிலை: சறுக்கியது திமுக

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் அதிமுக முன்னனியில் உள்ளது.


 
 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. 
 
மொத்தம் 74 சதவீத வாக்குகள் பதிவானது. அந்த வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே திமுக முன்னனியில் இருந்து வந்தது. இந்நிலையில் திமுகவுக்கு திடீர் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுக முன்னிலையில் சென்று கொண்டிருக்கிறது.
 
அதிமுக 72 தொகுதிகளிலும், திமுக 66 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. தபால் ஓட்டுகளில் திமுக முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.