திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 1 அக்டோபர் 2021 (08:58 IST)

இன்று முதல் தொடங்குகிறது அரசி ஏ.சி பேருந்து சேவை! – முகக்கவசம் கட்டாயம்!

தமிழக போக்குவரத்து கழகத்தின் ஏ.சி பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்படுகிறது.

தமிழகத்தில் மாவட்டங்களுக்கிடையே தமிழக போக்குவரத்து கழக்கத்திற்கு சொந்தமான ஏ.சி பேருந்துகள் செயல்பட்டு வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஏ.சி பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இப்போது பாதிப்பு குறைந்து அரசு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில் குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் குளிர்சாதன சொகுசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக 702 பேருந்துகள் பழுதுபார்க்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இன்று முதல் இந்த பேருந்துகள் இயங்கும் நிலையில் பேருந்தில் பயணிக்க முகக்கவசம் கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.