வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 1 அக்டோபர் 2021 (08:45 IST)

வெளுத்து வாங்கும் அடை மழை; 4 நாட்களுக்கு தொடரும்! – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு அதிகரித்துள்ள நிலையில் மழை இன்னும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பல பகுதிகளில் மிதமான மழையும், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு நாளை முதல் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.