திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 22 அக்டோபர் 2024 (09:20 IST)

90 நாட்கள் கெட்டுப்போகாத பால் நிறுத்தமா? ஆவின் நிறுவனம் விளக்கம்..!

aavin
90 நாட்கள் கெட்டுப்போகாத பால் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஆவின் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஆவினில் தயாரிக்கப்படும் 90 நாட்கள் கெடாத பாலில் 3 சதவீதம் கொழுப்பு மற்றும் 8.5% இதர சத்துக்கள் உள்ளன. தினசரி அடிப்படையில் மக்களுக்கு தேவையான அளவு இந்த பால் விநியோகமாகி வருகிறது. எந்தவித வேதிப்பொருளும் கலக்காமல், நவீன தொழில்நுட்ப முறையில் பேக் செய்யப்படுவதால் தொலைதூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் இந்த பால் உள்ளது.

இந்த நிலையில், 90 நாட்கள் கெடாத பால் பாக்கெட்டுகளை உற்பத்தி நிறுத்த உள்ளதாக வெளியான செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. இந்த தகவலை யாரும் பரப்ப வேண்டாம்; வழக்கம் போல் கெடாத பால் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தற்போது 40,000 கெடாத பால் பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளன, மேலும் எதிர்பார்க்கப்படும் மழைக்காலம் மற்றும் பேரிடர் காலங்களில் எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் பால் விநியோகம் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva