புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2020 (09:22 IST)

திருமணம் செய்து வைக்காத பெற்றோர்! – கல்லை போட்டு கொன்ற மகன்!

திருவண்ணாமலையில் திருமணம் செய்து வைக்காமல் தாமதப்படுத்திய தாய், தந்தையரை மகனே கல்லை போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சாந்தனூர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். சற்று மனநிலை சரியில்லாதவராக இருந்த அவருக்கு மூன்று தங்கைகள் உள்ளனர். மூவருக்கும் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் 30 வயதை எட்டிவிட்ட போதிலும் ராம்குமாருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் பெற்றோர் செய்யவில்லை. இதனால் ராம்குமார் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அடிக்கடி பெற்றோரை வற்புறுத்தி வந்துள்ளார்.

பெற்றோரும் விரைவில் பெண் பார்ப்பதாக அவரை ஆறுதல்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என ஆத்திரம் அடைந்த ராம்குமார் இரவு உறங்கிக் கொண்டிருந்த தனது தாய், தந்தை மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். பிறகு அங்கிருந்து தப்பி திருவண்ணாமலை ஓடியுள்ளார்.

இதுகுறித்து விபரமறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், திருவண்ணாமலையில் தலைமறைவான ராம்குமாரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.