திருவண்ணாமலையில் தொடங்கிய தேரோட்டம்! – ஊர் முழுவதும் விழாக்கோலம்!
திருவண்ணாமலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து தேரோட்டம் நடப்பதால் தேரோட்டத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் 7வது நாளான இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகள் கொரோனா காரணமாக இந்த தேரோட்டம் நடைபெறாததால் தற்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
காலையில் விநாயகர் தேர், முருகன் தேர் வீதி உலா முடிந்ததும், பெரிய தேர் புறப்படும். இந்த தேரை ஆண்களும், பெண்களுக்கு இருபுறமும் அணிவகுத்து வடம் பிடித்து இழுப்பர். இரவு நடைபெறும் அம்மன் தேர் வீதி உலாவில் பெண்கள் மட்டுமே தேரை இழுப்பர். அதை தொடர்ந்து வரும் சண்டிகேஸ்வரர் தேர் சிறுவர், சிறுமியரால் இழுத்து வீதி உலா நடைபெறும்.
Edit By Prasanth.K