திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (12:47 IST)

ஆட்டோவை இறுக்கி பிடித்த ஆலமரம்! – திருப்பூரில் வைரலாகும் புகைப்படம்!

Tirupur
திருப்பூரில் பூங்கா ஒன்றில் ஆலமரத்தினுள் ஆட்டோ சிக்கி இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் பல பழமையான மரங்கள் உள்ளன. இந்த பூங்காவில் நடைபயிற்சி செல்லும் மக்கள் ஒரு ஆலமரத்தை மட்டும் அதிசயமாக பார்த்து வருகின்றனர்.

ஆந்த ஆலமரத்தின் நடுவே ஒரு ஆட்டோ சிக்கி இருப்பதுதான் அதற்கு காரணம். எப்படி ஆட்டோ அந்த ஆலமரத்திற்குள் சிக்கியிருக்கிறது என பலரும் ஆச்சர்யமாக பார்க்கின்றனர். ஆனால் அந்த மரம் அங்கு செடியாக இருந்தபோது பழைய ஆட்டோ ஒன்று அங்கி கிடந்ததாகவும் நாளடைவில் மரம் வளர வளர ஆட்டோவை சுற்றி வளர்ந்து ஆட்டோவை நெருக்கிவிட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ள நிலையில் இந்த ஆட்டோவை காண மக்கள் பலர் பூங்காவுக்கு வருகின்றனராம்.