இந்திய கம்யூ.க்கு துணை மேயர், நகராட்சி தலைவர் பதவி
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றதை அடுத்து பெரும்பாலான மாநகராட்சிகளை திமுக தன் கைவசம் வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவியை வழங்க திமுக முடிவு செய்துள்ளது
அதேபோல் கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவியையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது
மேலும் பவானி புளியங்குடி அதிராம்பட்டினம் போடிநாயக்கனூர் நகராட்சி துணைத் தலைவர் பதவிகளும் சிபிஐக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.