திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: சனி, 19 மார்ச் 2022 (17:05 IST)

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுவதால் அடுத்த இரண்டு நாள்களுக்கு கன்னியாகுமரி திருநெல்வேலி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும், தமிழகத்தில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.