வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (13:50 IST)

20,000 ரூபாய்க்கு சிறுமிகள் விற்பனை – பாட்டி கைது !

திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் பகுதியில் இரு சிறுமிகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாட்டியும் சிறுமியை வாங்கியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் பகுதியில் பெற்றோர் இல்லாத இரு சிறுமிகள் விற்கப்பட்டு திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதாக கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில் சம்மந்தப்பட்ட பாட்டி விஜயலஷ்மி மற்றும் சிறுமிகளை வாங்கிய சகுந்தலா, கனகம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் திருப்பூரில் இருக்கும் சிறுமிகளை மீட்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.