திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 ஜூலை 2024 (15:47 IST)

கடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை.. 5 தனிப்படைகள் அமைப்பு..!

கடலூர் காராமணி குப்பம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
கடந்த சனிக்கிழமை அதிகாலை கொலை செய்துவிட்டு இன்று அதிகாலை உடலை தீ வைத்து எரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
கடலூர் அருகே காராமணி குப்பம் என்ற  பகுதியை  சேர்ந்த 40 வயது சுதன்குமார் என்பவர் ஐதராபாத்தில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில், இவரது வீட்டிற்குள் திடீரென மர்ம நபர்கள் புகுந்தனர்.
 
வீட்டில் இருந்த சுதன் குமார், அவரது தாயார் கமலேஸ்வரி மற்றும் சுதன்குமாரின் மகன் நிஷாந்தன் ஆகிய மூவரையும் மாறி மாறி  கொலை செய்து பிணத்தை ஒவ்வொரு அறையில் வைத்து அதன்பின் அறைகளுக்கு தீ வைத்துள்ளனர்.
 
இந்த கொலை  தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
Edited by Mahendran