வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 15 ஜூலை 2024 (13:18 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலையில் திமுகவினருக்கு தொடர்பு..! பகிர் கிளப்பிய எல்.முருகன்..!!

L Murugan
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் திமுகவினருக்கும் தொடர்பு உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.   
 
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (வயது 52) கடந்த 5-ந் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்த கொலை சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
 
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக அரசு மற்றும் திமுக காவல்துறையின் தோல்வியைத்தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
 
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது என்றும் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் திமுகவினருக்கும் தொடர்பு உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏதோ ஒன்றை மறைக்க தமிழக அரசும், காவல்துறையும் முயற்சிப்பதாகவும் கூறினார்.


ஆகவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.  சிபிஐ விசாரணை செய்தால்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்த உண்மைகள் வெளிவரும் என்று எல்.முருகன் கூறினார்.