ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 14 ஜூலை 2019 (17:47 IST)

தூக்கக் கலக்கத்தில் பஸ் ஓட்டிய பஸ் டிரைவர் – மூன்று பேர் பலி !

கோவையில் அரசு பஸ் டிரைவர் தூக்கக் கலக்கதில் பஸ்ஸை ஓட்டி எதிரே வந்த காரின் மேல் மோதியால் காரில் இருந்த மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

நேற்றிரவு 11.40 மணியளவில் திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த பஸ்ஸை இயக்கிய அரசு பஸ் டிரைவர் தூக்கக் கலக்கத்தில் இருந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் வேலப்ப நாயகன் வலசு என்ற பகுதியில் எதிரில் வந்த காரின் மேல் பேருந்தை மோதியுள்ளார்.

இந்த விபத்தால் சம்பவ இடத்திலேயே காரில் இருந்த நட்ராஜ், சுதர்சன், சொர்னமூர்த்தி ஆகிய மூன்று பேரும் பலியாகியுள்ளனர். மேலும் காரில் இருந்த 2 பேருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்மந்தமாக அப்பகுதி போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.