1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (16:02 IST)

தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!

தமிழகத்தில் நிர்வாக வசதிக்காகவும் விருப்பத்தின் பேரிலும் அவ்வபோது ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக திமுக ஆட்சி தொடங்கிய இந்த ஏழு மாதங்களில் பல ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகத்தில் பணிபுரிந்த மூன்று அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இட மாற்றம் செய்யப்பட்டுள்ள மூன்று அதிகாரிகளின் விவரங்கள் பின்வருமாறு
 
பால் உற்பத்தி & பால் பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையராக பிரகாஷ் நியமனம்.
 
தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக சுதீப் ஜெயின் நியமனம்.
 
எல்காட் நிறுவனத்தின் செயல் இயக்குநராக அருண்ராஜ் நியமனம்.