செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 ஜூலை 2021 (15:16 IST)

ஆபாச படம் பார்ப்பவர்களை மிரட்டி பணம் பறித்த கும்பல் சென்னையில் கைது!

ஆபாச படம் பார்ப்பவர்களை மிரட்டி பணம் பறித்த கும்பல் ஒன்று சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னையை சேர்ந்த ஒரு சிலர் தங்களை டெல்லி போலீஸ் என கூறிக்கொண்டு ஆபாச படம் பார்ப்பவர்களின் ஐபி அட்ரஸ்-ஐ கண்டுபிடித்து அவர்களிடம் போன் மூலம் மிரட்டியுள்ளனர். நீங்கள் ஆபாச படம் பார்த்து உள்ளதால் அந்த குற்றத்திற்காக 3000 முதல் 4000 வரை அபராதம் கட்ட வேண்டும் என்றும் இல்லையெனில் காவல்துறையினர் உங்கள் வீடுகளுக்கு வந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று மிரட்டியுள்ளனர்
 
இதற்கு பயந்து ஆபாச படம் பார்ப்பவர்கள் அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தி உள்ளனர். அவர்களுக்கு வரும் மெசேஜில் டெல்லி போலீஸ் லோகோன் இருந்ததை பார்த்தே அவர்கள் ஏமாந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சுமார் 34 லட்சத்திற்கும் மேல் இதுபோன்ற மோசடி செய்ததாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து டெல்லி போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீசாருடன் இணைந்து விசாரணை செய்த நிலையில் சென்னை மாங்காடு சேர்ந்த ராம்குமார் குளத்தூர் சேர்ந்த கேப்ரியல் ஜோசப் திருச்சியை சேர்ந்த வினோத் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இவர்களை தற்போது டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டு டெல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது