ரஜினி உயிருக்கு ஆபத்து: உள்துறைக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்?
ரஜினி விவகாரத்தில், உள்துறை அமைச்சகத்திற்கு ரகசிய அறிக்கை ஒன்றை, மத்திய உளவுத்துறை அளித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிட விடுதலை கழகத்தினர் கூறி வந்த நிலையில், தான் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் ரஜினி மக்கள் மன்றத்தினர் புகார் அளித்தனர்.
இந்நிலையில், ரஜினி விவகாரத்தில் உள்துறை அமைச்சகத்திற்கு ரகசிய அறிக்கை ஒன்றை, மத்திய உளவுத்துறை அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரஜினியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.