1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (12:56 IST)

''நெஞ்சம் பதைபதைக்கச் செய்யும் இந்த வீடியோ...முதல்வரின் கனவத்திற்கு''- கமல்ஹாசன் டுவீட்

சென்னையில் ஜெயிண்ட் ஹவுசிங் அன்ட் கன்ஸ்ட்ரக்சன்ஸ் லிமிட்டட் என்ற  நிறுவனம் சார்பில்  17 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய நிலையில், இது இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதுபற்றி கமல்ஹாசன்’’ உறுதியற்ற இந்த அடுக்ககம் ஆயிரக்கணக்கான உயிர்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

ஜெயிண்ட் சென்னை சாலிகிராமத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயிண்ட் ஹவுசிங் அன்ட் கன்ஸ்ட்ரக்சன்ஸ் லிமிட்டட் என்ற  நிறுவனம் சார்பில்  17 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டியது.

ஏ,பி. சி என மூன்று பிளாக்களில் மொத்தம் 640 வீடுகள் கட்டப்பட்ட நிலையில், சுமார் 450க்கும் மேற்பட்ட வீடுகள் விற்பனை செய்யப்பட்டு விட்டன.

கவர்ச்சியான விளம்பரம் மூலம் மக்களைக் கவர்ந்து மக்களிடம் இந்த வீட்டை விற்றுள்ளனர். இதை  நம்பி பல நூறு பேர் இங்கு வீட்டை வாங்கியுள்ளனர்.

அதன்பின்னர், சில ஆண்டுகளில், வீட்டில் உள்ள சுவற்றில் விரிசல், சிமெண்ட் பூச்சு உதிர்ந்துவிடுதல், தூண்கள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

குழந்தைகள், முதியோருடன் இந்த ஆபத்தான கட்டடியத்தில் வசித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அச்சத்துடன் வாழ்கின்றனர். இந்தக் கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி ஜெயிண்ட் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனம் மீது இந்த வீட்டுகளை வாங்கியோர் புகார் அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில்,
jain Westminster

‘வீடென்று எதனைச் சொல்வீர்?’நெஞ்சம் பதைபதைக்கச் செய்யும் இந்த வீடியோவை தமிழக முதல்வர்    அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். உறுதியற்ற இந்த அடுக்ககம் ஆயிரக்கணக்கான உயிர்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குகிறது. தரமான வீட்டை வழங்கத் தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.