வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2017 (16:04 IST)

இப்படியும் மீத்தேன் எடுக்கலாம்; விளைநிலங்களை குறிவைப்பது ஏன்?: நடிகர் ஜி.வி.பிரகாஷ் கேள்வி!

இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சினிமா பிரபலங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 
நடிகர் கமல்ஹாசன் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்ட்டு வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது ஜி.வி.பிரகாஷும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகைய்ல் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறும்போது, நெல் விளையும் பூமியில்தான் மீத்தேன் எடுக்கமுடியுமா என்ன? ஆய்வுப்படி குப்பைக் கிடங்கு,  இரசாயன ஆலை கழிவு, சாணம், விவசாயக் கழிவு, உலுத்துப் போன மரங்கள், ஈசல் புற்று, எறும்பு புற்று இவற்றின் மூலம் 85  சதவீதம் மீத்தேன் எடுக்க முடியும். அதை விட்டு 12 விழுக்காடு மீத்தேன் தரும் விளைநிலங்களை குறிவைப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கெனவே ஜல்லிக்கட்டுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தவர் என்பது  குறிப்பிடத்தக்கது.