அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்: டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து திருமாவளவன் கோரிக்கை..!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து கோரிக்கை விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று டிஜிபி சைலேந்திரபாபு அவர்களை சந்தித்தார். அப்போது அவர் வேங்கை வயல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் முன்னால் ராணுவ வீரரான பாண்டியனை தூண்டிவிடும் அளவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாகவும் இருந்தால் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பாஜக தொடர்ந்து செயல்படுகிறது என்று டிஜிபியை சந்தித்த பின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva